அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு


பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்ம்ம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம, 8. வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.

1. ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2. உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில்

மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.

2. உச்சாடனம் : பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய் மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி ஆகும். இதில்

மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.

3. பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.

நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.

4. மாரணம் : கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.

மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம், வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை, கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.

5. மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.

பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை,
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு,
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது,
மனிதர்களை மோகிக்க - கிராம்பு,
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.

6. வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.

இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.

7. வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.

8. தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்க்கு பயன்படும் மூலிகைகள் 1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்தி சாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.

விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,

பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை,
கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,

கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.

மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் ஜெயமாகும்.

அதற்காக மூலிகை சாபநிவர்த்தி செய்யும் முறையை பார்ப்போம்  

எந்த மூலிகைக்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டுமோ அந்த மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து காய்ந்த தரையாக இருந்தால் அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நீர் ஊற்றி வைக்க வேண்டும் அப்போது தான் பிடுங்க எளிதாக இருக்கும் .

தேவையானவை :

முனை முறியாத மஞ்சள் 
நூல் 
மஞ்சள் போடி 
பத்தி 
சூடகம் 
சாம்பிராணி 
வாழைபழம் 
வெற்றிலை 
பாக்கு 
நைவேத்தியம் 

இவைகளை அந்த மூலிகையின் முன் படைத்து அதற்கு கீழ் கண்ட மந்திரத்தை கூறி சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .

மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் :

ஆனைமுகனை அனுதினம் மறவேன் 
அகத்தியர் சாபம் நசி நசி 
சித்தர்கள் சாபம் நசி நசி 
தேவர்கள் சாபம் நசி நசி 
மூவர்கள் சாபம் நசி நசி 
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி 

 என்று மூன்று தடவை விபூதி கையில் எடுத்து வைத்து கொண்டு கூறி மூலிகை மேல்போட மூலிகை சாபநிவர்த்திபெறும்  
அதன் பின் மஞ்சள் நூல் காப்புக்கட்டி முலிகை பிடுங்க வேண்டும் 

பிடுங்கிய மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் ஜெபிக்க வேண்டும் 

மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் :

ஓம் மூலி மஹா மூலி ஜீவ மூலி 
உன் உயிர் உன் உடலில் நிலைத்து நிற்க சிவா 

என்று மூன்று தடவை மந்திரம் ஜெபித்து கொஞ்சம் விபூதியும் அருகம்பில்லும் மூலிகை மேல் போடா மூலிகை உயிருடன் இருந்து பலன் கொடுக்கும் .

1, மஹா கணபதி  தியானம் 

2, தெட்சணாமூர்த்தி  தியானம் 

3, சகல மந்திர சாபநிவர்த்தி 

4, பிரணாப் பிரதிஷ்டா மந்திரம் 

5, சகல யந்திரங்களுக்கும் மந்திரம் 

6, மந்திர காயத்திரி  

7, யந்திர காயத்திரி

8, சகல  கருக்கலுக்கும் சக்தி அளிக்கும் மந்திரம் 

9, பூஜிக்கும் தேவதைகளுக்கு பந்தந் நிவர்த்தி 

10,சகல தேவதா வசிய மந்திரம் 

ஆக 10 வித மந்திரங்களை கீழே காண்போம் 

1. மகா கணபதி தியானம் 

ஓங் கணபதி வருக ஓங்கார கணபதி வருக 

றீங் கணபதி வருக றீங்கார கணபதி வருக 

ஸ்ரீங் கணபதி வருக ஸ்ரீங்கார கணபதி வருக 

கங் கணபதி வருக நான் நினைத்த காரியங்கள் 

வசி -வசி -வயநம சிவாயநம -ஒம்-றீயும்

ஸ்ரீயும் -அவ்வும் சவ்வம் -கங் கனாய கனாய வருக சுவாஹா 

கணபதி  

ஐம் கணபதி
 க்லீம் கணபதி
ஸவ்ம் கணபதி 
வாவா கணபதி 
சர்வ தேவாதி தேவர்களும்
 சர்வ ஜீவராசிகளும் 
நான் நினைத்த அணைத்தும்
என் வசியமாக 
வசிவசி அசியசி ஸ்வாஹா 

2) தெஷிணாமூர்த்தி தியானம் 

ஓம் நமசிவய சிவ சிவ சரணம் சிவானந்தம் 

சிவ சிவ சிவாய ஆக்ருஷ்ய 

( குறிப்பு: எந்த மந்திரம் சொல்லும் முன்பு மேற்கண்ட மந்திரத்தை தெட்சணாமூர்த்தி சன்னதியில் இருந்து 21 முறை சொல்லிவிட்டு பிறகு மந்திரங்கள் உச்சரித்தால் மந்திரம் சீக்கிரம் பலன் தரும்.)

3) சகல மந்திரங்களின் சாப நிவர்த்தி  

ஓம் அங் உங் சிங் க்லீம் ஹபீம் அவவும் சல மந்திரங்களின் சாபம் நாசி மாசி சுவாகா .

4) பிராண பிரதிஷ்டை மந்திரம் 

ஆம் ஹ்ரீம் க்ரோம் யரல வஷக்ஷனி ஹோம் ஹம்ச ஷெஷம் சோகம் அம்ச அஸ்ய (தேவதை பெயர்)பிராணா இகிப்ராணா ஜீவ இஹஸ்திதா   அஸ்யஸர் வேந்திரியாணி வாங்க்மன த்வச் சஹீஷ் சோதர தான சமான இகைவ .ஆக்த்ய அஸ்மின் பிம்பே யந்திரே (தேவதையின் பெயர்)ஸூகம் சிரம் திஷ்டந்து சுவாஹா .(தேவதையின் பெயர்)பிராணன் பிரதிஷ்டையாமி .

5) சகல யந்திரங்களுக்கும் அர்ச்சனை மந்திரம் 

 1) ஓம் பிராணயா பிராண ரூபாய பிராண லிங்காய பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

2) ஓம் ஜீவாயா ஜீவா ரூபாயா ஜீவ லிங்காயா ஜீவ பிரதிஷ்ட்டாய ஸ்வாகா 

3) ஓம் மந்திராயா மந்திர ரூபாயா மந்திர லிங்காயா ம்,மந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

4) ஓம் தந்திராயா தந்திர ரூபாயா தந்திர லிங்கயாதந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

5) ஓம் பிரம்மாயா பிரம்மா ரூபாயா பிரம்மா லிங்காயா பிரம்மா பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

6) மந்திர காயத்ரி .

மந்திர ராஜாய வித்மஹே மஹா மந்திராய தீமகி தன்னோ மந்திர பிரசோதயாத் 

7) யந்திர காயத்ரி 

யந்திர ராஜாய வித்மஹே மஹா யந்திராய தீமகி தன்னோ யந்திர பிரசோதயாத் .

8) சகல  கருக்கலுக்கும் சக்தி அளிக்கும் மந்திரம் 

நங் லங் மங் லங் சிங் லங் வங் லங் யங் லங் லம் லங் ஓம் ஆம் லா லீ லு உம் படு ஸ்வாஹா ரெட்டு கட்டு கட்டவிழ்க்கவும் .

9) பூஜிக்கும் தேவதைகளுக்கு பந்தந் நிவர்த்தி 

ஐம் ஹ்ரீம் பகளாமுகி பூஜ்யமான சகல தேவதா மம சத்ரு பிரேரித தேவதாக்கு பந்தாத் முக்த பந்தா குரு குரு ஸ்வாஹா வங் சிங் உச்சாடாய உச்சாடாய .

10)  சகல தேவதா வசிய மந்திரம் 

மீறியும் கிரியும் சிரியும் வசி வசி

இந்த பத்து மந்திரங்களை முறைப்படி தெரிந்து செய்வதுவே நலம் செய்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பலன்  தரும் .

மாந்த்ரீகத்தின் வரலாறு :


ரீக் - யஜ்ஜூர்- சாமம் - அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை சார்ந்தது தான் இந்த மாந்த்ரீகம் ஆகும். இதற்க்கு மூலாதாரமானவர் ஜமதக்கினி முனிவர் குமாரர் பரசுராமர் இயற்றிய பரசு ராம சூத்திரம் என்ற நூல் தான் பெரும் ஆதாரமாக திகழ்கின்றது என்றால் மிகையாகது.


மாந்த்ரீகத்தின்  நான் என்ன முறையாகும்


 உரு முறை ( WHITE MAGICK) : யந்திரம், மந்திரம், மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும்.

அஷ்ட கர்ம சித்திகள்


அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.

1.வசியம் :

நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.

2.மோகனம் :

நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் .

3 .ஆக்ருஷனம் :

எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல்.

4 . ஸ்தம்பனம் :

தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.

5. பேதனம் :

கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.

6 . வித்வேஷனம் :

ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.

7 . உச்சாடனம் :

எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .

8 . மரணம் :

மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது ) .



பூஜா விதி


அஷ்டதிக் பந்தனம் - திசைகட்டு
உடல் கட்டு மந்திரம்
மகா கணபதி தியானம்
குலதெய்வ தியானம்
அகத்தியர் தியானம்
உபாசனை தெய்வ ஆக்ருஷனம்
யந்திரம் வரையவும்
யந்திர சாப நிவர்த்தி
காரிய சித்தி மூலிகை மை வைக்கவும்
பிராண பிரதிஷ்டை மந்திரம்
மந்திர சாப நிவர்த்தி
மூலமந்திரம் உரு கொடுக்கவும்
அர்ச்சனை செய்யவும்

1.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :-

ஓம் சத்ருசம்ஹாரி| சங்கடஹரணி| மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய ||  

2.செல்வவளம் பெருக:-

க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||

3.சர்வ சித்திகளும் செல்வமும் பெற :-

ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா| மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||

4.வறுமை நீங்க :-

ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய  த்வம்சய||

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும்!



1.நன்னீர் - தூய்ப்பிக்கும்
2. நல்லெண்ணை - நலம்தரும்
3. பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும்
4. மஞ்சள் தூள் - நல் நட்பு வாய்ப்பிக்கும்
5. திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்
6. பஞ்சகவ்யம் - தீதளிக்கும், ஆன்மசுத்தி (பசுவின் பால்,
தயிர், நீர், சாணம், நெய் கலந்தது)
7. பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
8. பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம் - பலம், வெற்றி தரும்
10. தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி
11. நெய் - முக்தியளிக்கும்
12. சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர் - நல் சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்
16. சாத்துக்கொடி - துயர் துடைக்கும்
17. எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராøக்ஷ - திடசரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
20. மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம் - மங்கலம் தரும், யோகசித்தி
22. மாதுளை - பகைநீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய்த்துருவல் - அரசுரிமை
24. திருநீறு - சகல நன்மையும் தரும்
25. அன்னம் - அரசுரிமை
26. சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும்
27. பன்னீர் - சருமம் காக்கும்
28. கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்
29. சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும்.