நவாக்கரி எண்பத்து ஒருவகையாக நவாக்கரி அக் கிலீ சௌ முதல் ஈறே.

சௌமுதல் அவ்வொடு ஹௌஉடன் அம் க்ரீம் கௌவுகளும் ஐயுளும் கலந்து ஹ்ரீம் ஸ்ரீம் என்று ஒவ்வில் எழும் க்லீம் மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாயநம என்னே.
நவ அட்சரிம் என்பது தமிழில் மருவி நவாக்கரி ஆனது. ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம். ஒவ்வொன்றையும் முதலாக்கிக்கூற 81 அட்சரங்கள் ஆகும். முதல் வரிசையில் க்லீம் முதல் சௌம் வரை. அட்சரங்கள் இடம் மாறும்போது ஒளியும் நிறமும் மாறும்.
ஒன்பது வரிசையில் ஒவ்வொரு வரிசையும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் கூறியபின் ஓம் சிவாயநம என முடிக்கவும்.
மேலிருந்து கீழாக கூறுதல்

க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்        

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்

கீழிருந்து மேலாக கூறுதல் முடிக்கும்போது ஓம் சிவாய நம என முடிக்கவும்.

சௌம்

ஔம்

ஹௌம்

க்ரீம்

கௌம்  

ஐம்

ஹ்ரீம்

ஸ்ரீம்

க்லீம்

நவாக்கரியாவது நானறிவித்தை நவாக்கரி உளெழு நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத நவாக்கரி சக்தி நலம்தரும் தானே. நலந்தரு கல்வியும் ஞானமும் எல்லாம் உரம்தரும்வல்வினை உம்மை விட்டோடிச் சிரம் தரு தீவினை செய்வது அகற்றி வரம்தரு சோதியும் வந்திடும் காணே.
நான் அனுபவித்த மந்திரம் வித்தை இது.நாவுக்குள் மௌனமாக இதை ஓதினால் நன்மைகள் தரும். நவாக்கரி என்பது உள் எழு நன்மை என்பதால் உடம்பிற்குள் சார்த்தி சொல்லல் ஆகும். இந்திரயோனி- உள்நாக்கு, பிரம்மநாளம்- தலைஉச்சி. நவாக்கரி சக்கரம் ஓதுவதால் கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய வரம் தரும் உள் ஒளி உண்டாகும்.

நவாக்கரி அட்சரம் உடல் உள்ளே சார்த்துமிடம்.

க்லீம்- மூலாதாரம்

ஸ்ரீம்- சுவாதிட்டானம்

ஹ்ரீம் – மணிப்பூரகம்

ஐம்- அநாகதம்

கௌம் – விசுத்தி

க்ரீம்- இந்திரயோனி

ஹௌம்- ஆக்ஞா

ஔம்- நெற்றி உச்சி

சௌம்- பிரம்ம நாளம்

மேலிருந்து சொல்லி கீழிருந்து மேல்வரை சொல்லுவது ஒரு முறையாகும்

நினைந்திடும் அச்சிறீம் அக்கிலீம் ஈறா நினைந்திடும் சக்கரம் ஆதியும் ஈறும்

நினைந்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே நினைந்திடும் அர்ச்சனை நேர்தருவாளே

ஸ்ரீம் என்பதை முதலாகவும் க்லீம் என்பதை இறுதியாகவும் இச்சக்கரம் ஓதி நெல்லும் அருகம்புல்லும் தூவி அர்ச்சனை செய்க பராசக்தி அருள் புரிவாள். முதலில் இருந்த க்லீம் இதில் இறுதியானது. இரண்டாவதாக இருந்த ஸ்ரீம் முதலாவதானது. இதுபோல் ஒன்பது ஒலிகளும் முதலும் ஈறும் ஆகும்.
ஹ்ரீம் முதலாகவும் ஸ்ரீம் இறுதியாகவும் சொல்வதால் நாடாளும் அரசரும் வசமாவர்.
ஐம் முதலாகவும் ஹ்ரீம் இறுதியாகவும் சொல்வதால் நால்வகை வாக்கைன் சக்தியை அடியலாம். மேலும் வேதம் ஆகமம் ஆகியன பயிலாம்.
கௌம் முதலாகவும் ஐம் இறுதியாகவும் சொல்வதால் பகையை வெல்லலாம் ஓதிய்வர்களை பல உயிர்களும் வணங்கும்.
க்ரீம் முதலாகவும் கௌம் இறுதியாகவும் சொல்வதால் தெய்வ உறவாகி மழையும் செல்வமும் தரும்.
ஹௌம் முதலாகவும் க்ரீம் இறுதியாகவும் சொல்வதால் திருஐந்து எழுத்து ஓதி பயன் பெறுவர். மனோன்மணியின் அருள் கிடைக்கும்.
ஔம் முதலாகவும் ஹௌம் இறுதியாகவும் சொல்வதால் சுழுமுனை நாடியை வசம் செய்யும் அமுதேச்வரியின் அருள் கிடைக்கும்.
சௌம் முதலாகவும் ஔம் இறுதியாகவும் சொல்வதால் தலையில் சோதி விளக்காக பராசக்தி தெரிவாள்.
ஏய்ந்த மர உரி தன்னில் எழுதிநீ வாய்ந்த இப்பெண் எண்பத்தொன்றில் நிறைந்தபின்காய்ந்த அவிநெய் எள்கலந்து உடன் ஓமமும் ஆம்தலத்து ஆம் உயிர் ஆகுதி பண்ணே
மர உரியில் ஒன்பது பீஜங்களையும் ஒன்பது வகையாக எழுதி ஓமத் தீயில் நெய்யும் எள்ளும் வார்த்து உயிரையே நெய்யாகத் தருவதாய் எண்ணி ஆகுதி செய்க. காய்ந்த வாழை மரப்பட்டையில் நெய்யில் குங்குமம் கரைத்து நவாக்கரிச் சக்கரம் 9 வகை 81 வருமாறு வரிசையில் தனித்தனியே எழுது.

க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்ஹௌம்ஔம்சௌம்
ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்ஹௌம்ஔம்சௌம்க்லீம்
ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்ஹௌம்ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்
ஐம்கௌம்க்ரீம்ஹௌம்ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்
கௌம்க்ரீம்ஹௌம்ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்
க்ரீம்ஹௌம்ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்
ஹௌம்ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்
ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்ஹௌம்
சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்ஹௌம்
ஔம்