அதற்காக மூலிகை சாபநிவர்த்தி செய்யும் முறையை பார்ப்போம்
எந்த மூலிகைக்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டுமோ அந்த மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து காய்ந்த தரையாக இருந்தால் அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நீர் ஊற்றி வைக்க வேண்டும் அப்போது தான் பிடுங்க எளிதாக இருக்கும் .
தேவையானவை :
முனை முறியாத மஞ்சள்
நூல்
மஞ்சள் போடி
பத்தி
சூடகம்
சாம்பிராணி
வாழைபழம்
வெற்றிலை
பாக்கு
நைவேத்தியம்
இவைகளை அந்த மூலிகையின் முன் படைத்து அதற்கு கீழ் கண்ட மந்திரத்தை கூறி சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .
மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் :
ஆனைமுகனை அனுதினம் மறவேன்
அகத்தியர் சாபம் நசி நசி
சித்தர்கள் சாபம் நசி நசி
தேவர்கள் சாபம் நசி நசி
மூவர்கள் சாபம் நசி நசி
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி
என்று மூன்று தடவை விபூதி கையில் எடுத்து வைத்து கொண்டு கூறி மூலிகை மேல்போட மூலிகை சாபநிவர்த்திபெறும்
அதன் பின் மஞ்சள் நூல் காப்புக்கட்டி முலிகை பிடுங்க வேண்டும்
பிடுங்கிய மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் ஜெபிக்க வேண்டும்
மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் :
ஓம் மூலி மஹா மூலி ஜீவ மூலி
உன் உயிர் உன் உடலில் நிலைத்து நிற்க சிவா
என்று மூன்று தடவை மந்திரம் ஜெபித்து கொஞ்சம் விபூதியும் அருகம்பில்லும் மூலிகை மேல் போடா மூலிகை உயிருடன் இருந்து பலன் கொடுக்கும் .