ரகசியமான 9 விஷயங்கள்


இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:அவை
1.தனது வயது
2.பணம் கொடுக்கல்-வாங்கல்
3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்)
5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள்
6.செய்த தான தருமங்கள்
7.கிடைக்கும் புகழ்
8.சந்தித்த அவமானங்கள்
9.பயன்படுத்திய மந்திரம்

ஸ்ரீ காலபைரவர்


ஸ்ரீ காலபைரவர் 

ஓம் ஸ்ரீ பைரவாய நமஹ!

பைரவ காயத்ரி :



ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே !

சூல ஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவ ப்ரசோதயாத் :


வடுக பைரவ மூல மந்த்ரம்:


ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம் குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா
ஓம் சர்வ சத்ரு நாசய வித்மஹே மஹா வீராயதீமஹி ந்நோ சண்ட பைரவ :ப்ரசோதயாத்

உன்மத்த பைரவர் மந்திரம் :



ஓம் ஹ்ரீம் அங்க் க்லீம் உன்மந்தானத்த பைரவ

சர்வ சத்ரு நாசய குரு குரு ஸ்வாஹா


(தீவிரமான மனநோய்கள்சித்தபிரமை,ஹிஸ்டீரியா நோய் நீங்க)


ஸ்வர்ணாகர்ஷண பைரவர் :
(செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்)


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய
ஹூம்பட் ஸ்வாஹா


நைவேத்தியம் :

சக்கரை பொங்கல்மிளகு சாதம்,  தயிர்அன்னம்

வசியதன பிராப்தி எந்திரம்





மூல மந்திரம் :
"ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே ஸ்வாஹா//"




















மந்திரம், மாயவித்தை  சில அடிப்படைகள்


அஸ்டகர்மம்

மாந்திரீக சக்தி மூலம் நாம்
 1.வசியம் 
2. மோகனம் 
3. ஆகர்சணம் 
4. தம்பனம்
 5. பேதனம்
6. வித்வேசணம் 
7. உச்சாடனம் 
8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். 

மந்திரங்கள்

வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.


உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.


ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.


பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.


வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.


மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. 



மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

பலா பலகை - தம்பனம்
மாம் பலகை - மோகம்
வில்வம் - வசியம்
பேய்த்தேத்தான் - பேதனம்
எட்டிப்பலகை - வித்துவேடணம்
அத்திப்பலகை - மாரணம்
வெண்நாவல் - ஆக்ருசணம் 
வெப்பாலை - உச்சாடனம்.

இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.

மல்லிகை - வசியம்
முல்லை - மோகனம்
தும்பை - உச்சாடனம்
அரளி - ஆக்ருசணம்
காக்கனமலர் - வித்துவேடணம்
ஊமத்தம் - பேதனம்
கடலைமலர் - மாரணம்
தாமரை - தம்பனம்

இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர். 

செம்பட்டு - வசியம்
மஞ்சள் பட்டு - மோகனம்
பச்சைப்பட்டு - தம்பனம்
வெள்ளைப் பட்டு - பேதனம்
கழுதைவண்ணப்பட்டு - வித்துவேடணம்
பஞ்சவர்ணபட்டு - உச்சாடனம்
ஆந்தைவண்ணப்பட்டு - ஆக்ருசணம் 
கருப்பு வண்ணப்பட்டு - மாரணம். 

சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும்,
 அதன் மூல மந்திரங்களைப் பற்றியும்,
 அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம்.

 அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம். 


கிழக்கு - இந்திரன் - தம்பனம்
தென்கிழக்கு - அக்கினி - மோகனம்
தெற்கு - எமன் - மாரணம்
தென்மேற்கு - நிருதி - உச்சாடனம்
மேற்கு - வருணன் - ஆக்ருசணம்
வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம்
வடக்கு - குபேரன் - பேதனம்
வடகிழக்கு - ஈசன் - வசியம்

இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும்.
 மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

உருத்திராட்சம் - வசியமாகும்
மிளகுமணி - மோகனந்தான்
துளசிமணி - உச்சாடனம்
தாமரைமணி - தம்பனம்
நாகமணி - மாரணம்
சங்குமணி - ஆக்ருசணம்
எட்டிமணி - வித்துவேடணம்
வெண்முத்து - பேதனம்


இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.

ஞாயிறு - வசியம் மற்றும் பேதனம்

திங்கள் - தம்பனம்

செவ்வாய் - மோகனம்

புதன் - மாரணம்

வியாழன் - உச்சாடனம்

வெள்ளி - ஆக்ருசணம்

சனி - வித்துவேடணம்


அஷ்ட கர்ம பெயர்                கிழமைகள் 


1. வசியம்                            -      ஞாயறு 

2. தம்பனம்                         -       புதன் 

3. மோகனம்                       -       திங்கள் 

4.  உச்சாடனம்                   -       வியாழன்  

5. பேதனம்                           -       செவ்வாய்  

6. ஆகர்ஷணம்                  -       வெள்ளி  

7. வித்வேஷனம்               -       செவ்வாய் 


8. மாரணம்                           -       சனி  

  • மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும். 
  • முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்கு மலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள கை விரல்களின் கணுக்களை கொண்டு கணிக்கலாம் அல்லது உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும்.
  • மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு சாதனமாகும். மந்திரங்கள் நம் எண்ணங்களை வலுப்படுத்தி, ஆற்றலை வளர்த்து, மனச் சஞ்சலத்தைக் குறைத்து, மனதை அமைதிப் படுத்தி நம்மிடத்து நல்ல எண்ணங்களை வளர்க்கும் ஆற்றல்பெற்றவை. மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், {உடல், மனம், ஆன்மா} மூன்றையும் அந்த மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தில், அல்லது தேவதையில் நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய விரிப்பில் (, உரிய மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை, வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க வேண்டும். கண்டிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது. 


  • அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக, 2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில் மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக பலன் உள்ளது. 


  • அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு நோக்கியும், மாரண மந்திரங்கள் தெற்கு நோக்கியும் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நாவசையாமல் உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம். 16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். 


  • பூசை அறை சிறப்பானதாக இருக்க வேண்டும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது.  யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. 


  • அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது. பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும். மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. அகோர மந்திரங்கள் முறைப்படி வழிபாடு செய்யாவிட்டால் நமக்கு எதிர்விளைவுகளைக் கொடுத்து விட வாய்ப்புள்ளது.
  •  அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
  • வீரபத்திரரின் பீஜ மந்திரமான "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.
  • இதில் மந்திரம் என்பது - "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி". 
  • மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.

சகலத்திர்கும் கட்டு மந்திரம்.

ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம

செல்வம் பெருக வழிமுறைகள்


 

1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்

2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.

3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.

4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.


5. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.

6. பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும். இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.
 

7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.
 

8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.

9. படத்திற்க்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.

10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

11. திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.
 

12. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.

13. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும். அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.

14. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.

இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அப்புறம்தான் பொருள்செல்வம்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!

தயவு செய்து இதை மற்றவர்களுக்கும் தெரிய படுத்தவும்